Sunday, May 9, 2010

ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்

பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று காணும்- நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)

அனுபல்லவி

இசை ஆறும் குழல் கொண்டு வந்தான் இந்த
ஏழேழ் பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான் அந்த
திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

மத்திம காலம்

எங்காகிலும் இறைவா இறைவா என மன நிறை அடியவரிடம்
தாங்கும் மனத்துடையான் அருள் பொங்கும் முகத்துடையான் ஒரு
பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட
மயிலின் இறகாட மகர குழை ஆட மதி வதனம் ஆட
மயக்கு விழி ஆட இது கனவோ நனவோ என
மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)

சரணம்
அசை போடும் ஆவினங்கள் கண்டு - இந்த
அதிசயத்தில் சிலை போல நின்றதுவும் உண்டு
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
நீளுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசை ஆறும் கோபாலன் நின்று - நின்று
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட

மத்திம காலம் ... ...
அசைந்தாடும் ... ...

No comments:

Post a Comment